search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவுநீர் தொட்டி"

    • மோசஸ், தேவன் ஆகியோர் விஷ வாயு தாக்கி பலியானார்கள்.
    • கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

    திருநின்றவூர்:

    ஆவடி, ஓ.சி.எப். பகுதியில் உள்ள குடியிருப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது தொழிலாளர்கள் மோசஸ், தேவன் ஆகியோர் விஷ வாயு தாக்கி பலியானார்கள். இது தொடர்பாக தேசிய தூய்மைபணியாளர்கள் பாதுகாப்பு ஆணைய தலைவர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

    மேலும் அவர்கள், ஆவடி மாநகராட்சி அதிகாரிகளிடம் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

    • சுப்பிரமணியத்தின் உடலை போலீசார் மீட்டனர்.
    • பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (65).இவர் கிருஷ்ணாபுரம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிப்பு வேலை செய்து வந்தார். நேற்று காலை வேலைக்கு சென்ற சுப்பிரமணி பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் அங்குள்ள கழிவு நீர் தொட்டிக்குள் சுப்பிரமணி பிணமாக கிடந்தார்.

    அவரது உடலை போலீசார் மீட்டனர். சுப்பிரமணி கழிவு நீர் தொட்டிக்குள் தவறி விழுந்தாரா? அல்லது விஷவாயு தாக்கியதா? என்பது குறித்து பொன்னேரி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • அழகர்சாமிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜாமணி என்பவருக்கும் வீட்டின் முன்பாக உள்ள செப்டிக் டேங்க் தொட்டி வைப்பதில் பிரச்சினை இருந்தது.
    • செப்டிக் டேங்க் குழி தோண்டினால் நான் எப்படி செல்வேன் என்று அழகர்சாமி ராஜா மணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 38). இவர் நரிக்குடி அருகே உள்ள துய்யனூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி கீதா பிரியா.

    அழகர்சாமிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜாமணி என்பவருக்கும் வீட்டின் முன்பாக உள்ள செப்டிக் டேங்க் தொட்டி வைப்பதில் பிரச்சினை இருந்தது. இதுதொடர்பாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    செப்டிக் டேங்க் குழி தோண்டினால் நான் எப்படி செல்வேன் என்று அழகர்சாமி ராஜா மணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று இவர்களுக்குள் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

    இதில் மனம் உடைந்த ஆசிரியர் அழகர்சாமி வீட்டில் வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளித்துள்ளார் 80 சதவீத தீக்காயத்துடன் இருந்தவரை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் கடந்த 10-ந் தேதி சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அழகர்சாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றன.

    • அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவு நீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது
    • கழிவுநீர் தொட்டியின் மேல் பகுதி திறந்து கிடந்ததால் அதில் கலா தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    போரூர்:

    மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், தனலட்சுமி நகரை சேர்ந்தவர் மகா தேவன். இவரது மனைவி கலா(வயது50).

    இவர் அதே பகுதி மெட்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை பார்த்து வந்தார். கடந்த 20-ந் தேதி வழக்கம் போல வீட்டு வேலை பார்க்க சென்ற கலா பின்னர் திரும்பி வர வில்லை. அவர் மாயமாகி இருந்தார். அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். இதுபற்றி மகாதேவன் மதுரவாயல் போலீசிலும் புகார் செய்து இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அதே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவு நீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. அங்கு வசிப்பவர்கள் சென்று பார்த்தபோது கலா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கழிவுநீர் தொட்டியின் மேல் பகுதி திறந்து கிடந்ததால் அதில் கலா தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் மாயமான 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டு உள்ளார்.

    • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கழிவு நீர் தொட்டியில் பெண் சிசு பிணம் மிதந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டு அருகில் உள்ள ஒரு கழிவு நீர் தொட்டியில் ஒரு குழந்தை பிணமாக மிதந்த நிலையில் கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இது தொடர்பாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்துக்கு விைரந்து சென்று கழிவுநீர் தொட்டியில் கிடந்த அந்த குழந்தை உடலை மீட்டனர். அது பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஆகும்.

    அந்த குழந்தையை கழிவுநீர் தொட்டியில் வீசி சென்றது யார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக மதுரை அரசு ஆஸ்பத்திரி சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்காக வந்திருந்த யாரோ பெண் தான், பெண் சிசு சடலத்தை கழிவு நீர் தொட்டியில் வீசிச்சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.

    கள்ளக்காதலில் பிறந்ததால் வேண்டாம் என்று குழந்தையை பெற்றெடுத்த பெண் வீசி சென்றாரா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீசினார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தானேவில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கியதில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள தோகாலி பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை கழிவுநீர்தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென விஷவாயு தாக்கியதால் சம்பவ இடத்திலேயே 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மயக்கம் அடைந்த 5 தொழிலாளர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில்சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
     
    அதிகாலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தலைநகர் டெல்லியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளிகள் பரிதாபமாக பலியாகினர்.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் ரோகிணி பகுதியில் உள்ள பிரேம் நகரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக அதில் இறங்கினர். அப்போது, திடீரென விஷவாயு தாக்கியது. இதில் 5 பேரும் மயக்கம் அடைந்தனர்.

    அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் கழிவுநீர் தொட்டியில் விழுந்து கிடந்த தொழிலாளர்களை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். அவர்களில் 2 பேர் விஷவாயு தாக்கி பலியானதாகவும் மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மீட்பு படையினர் தெரிவித்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் தந்தை, மகன்கள் உட்பட 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #PoisonousGas #ToxicGas
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் செல்வ பெருமாள் நகரில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). இவருக்கு 2 மகன்கள் இருந்தனர்.

    இன்று காலை அவர் வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த லாரியை வரவழைத்து இருந்தார். தொழிலாளிகள் பாதி அளவு கழிவுகளை எடுத்துக் கொண்டு லாரியை எடுத்துச் சென்றனர்.

    எவ்வளவு கழிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பார்ப்பதற்காக கிருஷ்ண மூர்த்தி தொட்டியை எட்டிப் பார்த்தார். அப்போது அவர் மீது வி‌ஷவாயு தாக்கியது. மயக்கம் அடைந்த அவர் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தார். இதனை கண்ட அவரது 2 மகன்களும் காப்பாற்ற முயன்றனர். அவர்களும் வி‌ஷவாயு தாக்கி தொட்டிக்குள் விழுந்தனர்.

    அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டில் வசித்த 3 ஆண்கள் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி கிருஷ்ண மூர்த்தியையும், அவரது 2 மகன்களையும் மீட்க முயன்றனர். அவர்களும் வி‌ஷவாயு தாக்கி பலியானார்கள்.

    அடுத்தடுத்து 6 பேர் வி‌ஷவாயு தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #PoisonousGas #ToxicGas
    பூந்தமல்லி அருகே தனியார் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இரு தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சென்னை:

    சென்னை பூந்தமல்லி அருகே தனியார் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி விவேகானந்தன், வீரா என்ற தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஒடிசா மாநிலத்தின் ராயகடா மாவட்டத்தில் இன்று சுத்தம் செய்வதற்காக கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய ஒரு பெண் உள்பட 5 துப்புரவு தொழிலாளிகள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் ராயகடா மாவட்டத்துக்கு உட்பட்ட டுர்கி  கிராமத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கழிவுநீர் தொட்டிக்குள் ஒரு பெண் தொழிலாளி இன்று இறங்கினார். தொட்டியில்  இருந்து வெளியான நச்சுவாயுவினால் மூச்சுத்திணறிய அந்த பெண்ணின் கூச்சலை கேட்டு அடுத்தடுத்து 5 தொழிலாளிகள் அவரை மீட்பதற்காக உள்ளே இறங்கினர்.

    அவர்கள் 5 பேரும் மயக்கமடைந்து விழுந்தனர். இதைகண்ட அக்கம்பக்கத்தினர் தொட்டியின் மேல்பகுதியில் இருந்த சிமெண்ட் காரையை உடைத்து அவர்கள் 6 பேரையும் வெளியே மீட்டனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களில் ஒரு பெண் உள்பட 5 பேர் வழியிலேயே உயிரிழந்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பிரேதங்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    கூடலூர் அருகே கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த காட்டு யானை பரிதாபமாக இறந்தது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம் கூடலூர் கோக்கால் மலையடிவாரம், 4-ம் நெம்பர், கெவிப்பாரா, பாலவாடி, சூண்டி உள்ளிட்ட பகுதியில் 13 காட்டு யானைகள் முகாமிட்டன. இதனால் கூடலூர் எல்லையோர கிராம மக்கள் பீதி அடைந்தனர். இதனால் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். இந்த நிலையில் ஓவேலி பேரூராட்சி பாலவாடி 1-ம் பாலம் பகுதியில் நேற்று அதிகாலை 6 மணிக்கு சுமார் 50 வயது மதிக்கத்தக்க காட்டு யானை (மக்னா) ஒன்று நுழைந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஓவேலி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கூடலூர்- பார்வுட் சாலையை கடந்து பொதுமக்கள் நடந்து செல்லும் மேடான நடைபாதை வழியாக ஓடியது. வனத்துறையினர் தொடர்ந்து யானையை விரட்டியவாறு சென்றனர்.

    அதே பகுதியில் உள்ள ஜானகி என்பவரது வீட்டின் பின்பக்கம் வழியாக காபி தோட்டத்துக்குள் காட்டு யானை நுழைய முயன்றது. அப்போது அந்த வீட்டின் அருகே நிலத்தில் அடியில் கட்டப்பட்டு இருந்த கழிவுநீர் தொட்டி மீது காட்டு யானை நடந்து சென்றது. அந்த யானையின் எடையை தாங்க முடியாமல் கழிவுநீர் தொட்டியின் மேல்மூடி உடைந்தது. இதில், அந்த யானை கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தது. மேலும் யானையின் வலதுபுற கால் தொட்டிக்குள் சென்றது. மீதமுள்ள கால்கள் மற்றும் துதிக்கை நிலத்தின் மேற்புறம் இருந்தது.

    கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த காட்டு யானையால் எழுந்திருக்க முடியவில்லை. பலத்த காயம் அடைந்ததால் காட்டு யானை பிளிறியது. சம்பவ இடத்துக்கு வனத்துறையினரும், பொதுமக்களும் ஓடி வந்தனர். பின்னர் தொட்டிக்குள் விழுந்த காட்டு யானையை மீட்பதற்காக தொட்டியின் அருகே மண்ணை தோண்டும் பணியில் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர். இருப்பினும் காட்டு யானையால் வெளியே வர முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் உதவி வன பாதுகாவலர் விஜயன், வனச்சரகர்கள் குமார், ராமகிருஷ்ணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி உள்பட வனத்துறையினர், போலீசார் அப்பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    மேலும் தொட்டிக்குள் காட்டு யானை விழுந்து இருக்கும் தகவல் பரவியதால் ஏராளமான பொதுமக்கள் அப்பகுதிக்கு வர தொடங்கினர். இதனால் காட்டு யானையை மீட்கும் பணி பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் பொதுமக்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினர். மேலும் காட்டு யானையை பொக்லைன் எந்திரம் கொண்டு மீட்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக கூடலூரில் இருந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. பின்னர் சுமார் 80 அடி உயரமான பாதை வழியாக பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டது.

    இதனிடையே சுமார் 2½ மணி நேரத்துக்கு பிறகு காட்டு யானை உயிரிழந்தது. இது கிராம மக்கள் மற்றும் வனத்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் காட்டு யானையின் உடல் தொட்டியில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.

    தொடர்ந்து கால்நடை டாக்டர் டேவிட் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த வேகத்தில் காட்டு யானையின் நெஞ்சு மற்றும் இருதயத்தில் பலத்த அடிபட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. பின்னர் காட்டு யானையின் உடல் அப்பகுதியில் புதைக்கப்பட்டது. 
    விருதுநகர் பி.ஆர்.சி. டெப்போ அருகே கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் பி.ஆர்.சி. டெப்போ அருகே டான்பெட் உரகிட்டங்கி உள்ளது. இங்குள்ள கழிவுநீர் தொட்டிக்குள் விருதுநகர் தாமரை தெருவை சேர்ந்த முத்து என்பவரது பசுமாடு விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் அங்கு வந்தனர்.

    கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆதீஸ்வரன் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அரை மணி நேரம் போராடி பசுமாட்டை பத்திரமாக மீட்டனர். பசுவை உயிருடன் மீட்டவர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர். கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த பசுமாடு சினையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    ×